சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று, 2 பெண்களை ஆபாச வார்த்தையில் திட்டியதாகக் கூறி, 2 வாலிபர்களை அவர்கள் நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தரப்பில் சிதம்பரம் நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.