சிதம்பரம்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

2பார்த்தது
சிதம்பரம்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் அருகே நாஞ்சலூர் வக்காரமாரி கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பவானி (21) தற்கொலை செய்து கொண்டார். திருமணமான ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் பவானி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி பவானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய கணவர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது மனைவியின் சடலத்தை கண்டு கதறி அழுதார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி