கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் தற்போது 3,324 டன் யூரியா, 1,373 டன் டி.ஏ.பி, 1,463 டன் பொட்டாஷ், 6,262 டன் காம்ப்ளக்ஸ் உரம், 1,358 டன் சூப்பர் பாஸ் பேட் என மொத்தம் 13,002 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.