கடலூர்: ஒரே நாளில் குவிந்த 994 மனுக்கள்

74பார்த்தது
கடலூர்: ஒரே நாளில் குவிந்த 994 மனுக்கள்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று (மார்ச்.24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 994 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி