ஸ்ரீமுஷ்ணம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயி செல்வக்குமாரிடம் 320 நெல் மூட்டைகளுக்கு ரூ.18,820 லஞ்சம் கேட்ட எழுத்தர் ராஜாராம், மேற்பாா்வையாளர் வீரபாண்டியன் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை கையும் களவுமாக கைது செய்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி அளித்த புகாரின் பேரில், ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து செல்வக்குமார் பொறி வைத்ததில், லஞ்சம் வாங்கியபோது இருவரும் பிடிபட்டனர். அவர்கள் கடலூர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.