கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நேற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் 69 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சாய் பிரியா பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த முகாம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.