கடலூர்: நூலிழையில் உயிர்தப்பிய பள்ளி மாணவர்கள்

881பார்த்தது
கடலூர்: நூலிழையில் உயிர்தப்பிய பள்ளி மாணவர்கள்
புவனகிரி அருகே வயலூர் பகுதியில் நேற்று (நவ. 8) விருதாச்சலத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுற்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் காயமின்றி உயிர்தப்பிய நிலையில், ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி