வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (டிச.3) சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.