கடலூர் மாவட்டம் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடலூர் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவுக்கும்,
அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பரங்கிப்பேட்டைக்கும், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா ஒரத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் காவல் துறையில் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றுள்ளன.