கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிதம்பரம் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மருத்துவரிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவ சிகிச்சைக்கு வரும் பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தினார்.