வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலூர் மாவட்டத்தில் வருகின்ற 29 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று இதைத் தெரிவித்துள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் 28 ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.