சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த முகுந்தன் (44) என்பவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான பூதங்குடிக்குச் சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.