கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு ஆர்ச்கேட் அருகில் மின்மாற்றியில் இருந்து ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை நேற்று மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது பற்றி பி. உடையூர் உதவி செயற்பொறியாளர் கணேசன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.