சேத்தியாத்தோப்பு அடுத்த கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 45 வயது விவசாயி தர்மர், இருசக்கர வாகனத்தில் வடலூர் சாலையில் சென்றபோது, சேத்தியாத்தோப்பிலிருந்து வடலூர் நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரது உடலை சேத்தியாத்தோப்பு போலீசார் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.