சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்துகொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.