
கடலூர்: ஜனவரி மாதத்தில் அதிகமாக 44 சதவீதம் மழை பதிவு
கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 முதல் 31 வரை 25.1 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், இதுவரை 36 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், இயல்பை விட 44% மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த திடீர் மழைப்பொழிவு கடலூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





































