
கடலூர்: ரோஜா பூக்களின் விலை உயர்வு
உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதல் சின்னமான ரோஜா பூக்களின் விலை கடலூரில் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. முன்பு ரூ. 10, ரூ. 15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரோஜா பூக்கள் நேற்று ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டன. சிவப்பு ரோஜா ரூ. 50-க்கும், பேக்கிங் செய்யப்பட்ட ரோஜா ரூ. 70-க்கும் விற்கப்பட்டது.





























