கடலூர் அடுத்த சாவடி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் உள்ள உணவுகளை தின்பதற்காக இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் திடீரென சாலையின் குறுக்கே ஓடும் பன்றிகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சாலையில் திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.