கடலூர் சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

7பார்த்தது
கடலூர் சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு
கடலூர் மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்களாக போலீசார் சோதனை நடத்தினர். இதில் தண்டனை கைதிகளான நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32) மற்றும் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சரத்குமார் (31) ஆகியோரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் மீதும் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி