நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் தீட்சிதர்கள் அவருக்கு மரியாதை அளித்தனர். பின்னர் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், தனது தாயார் கும்பகோணத்தையும், தந்தை பாலக்காட்டையும் சேர்ந்தவர் என்று தெரிவித்தார்.