மூன்று தினங்களுக்கு முன்பு காட்டுமன்னார்குடி பகுதியில் கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி நேரில் சென்று ஆறுதல் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. உடன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.