சேத்தியாத்தோப்பு உட்கோட்ட பகுதியில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், துணை காவல் கண்காணிப்பாளர் P. V. விஜயகுமார் அறிவுறுத்தலின்படி, காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையில் காவல்துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, எள்ளேரி மற்றும் கடைத்தெரு பகுதிகளில் சுற்றித் திரியும் சுமார் 150 மாடுகளின் கழுத்தில் ரிஃப்ளெக்டர் பொருத்தப்பட்ட பெல்ட்களைப் பொருத்தி, விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.