கடலூர்: சப் இன்ஸ்பெக்டர் ஓட்டிய கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

4பார்த்தது
கடலூர்: சப் இன்ஸ்பெக்டர் ஓட்டிய கார் மோதி 2 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீஸ்காரர் இமாம் உசேன் ஆகியோர் நேற்று மாலை கடலூரிலிருந்து ஆவினங்குடி திரும்பிக் கொண்டிருந்தனர். கடலூர்- விருத்தாசலம் சாலையில் அன்னவெளி அருகே சாலையோரம் நின்றிருந்த நான்கு பேர் மீது அவர்கள் வந்த கார் மோதியது. இதில் கட்டிட தொழிலாளர்களான ஜெயராஜ் (45) மற்றும் வடிவேல் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாஸ்கர் (47) மற்றும் மோகன் (60) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி