கடலூர்: 204 பள்ளிகள் 100% தேர்ச்சி

322பார்த்தது
கடலூர்: 204 பள்ளிகள் 100% தேர்ச்சி
கடலூர் மாவட்டத்தில் 246 அரசு பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள், 147 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட 439 பள்ளிகளில் இருந்து 32 ஆயிரத்து 600 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 30 ஆயிரத்து 717 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் மொத்தம் உள்ள 439 பள்ளிகளில், 204 பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றன. இதில், 86 அரசு பள்ளி, 8 அரசு நிதி உதவிபெறும் பள்ளி, 110 தனியார் பள்ளி ஆகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி