கடலூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களின் பணியிட மாற்றம் தொடர்பாக நேற்று முன்தினம் (மே 31) ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், பணி மாறுதல் குழுவினர் முன்னிலையில் காவலர்களிடம் விருப்பமான காவல் நிலையங்கள் கேட்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் 286 காவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.