கடலூர்: கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

60பார்த்தது
கடலூர்: கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
கடலூர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதன் மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கே.என்.பேட்டை, செந்தமிழ்செல்வன் கீற்றுக் கொட்டகையில் சந்தேகிக்கும் வகையில் இருந்த 4 பேரை சோதனை செய்ததில், அவா்களிடம் 1.155 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. 

விசாரணையில் அவா்கள் கே.என்.பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமரன் மகன் ராஜேஷ், ரவி மகன் தேவநாதன், சேகர் மகன் அஜித்குமார், ராமதாஸ் மகன் கமல் கார்த்திக் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you