கடலூர்: 4 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம் - கடலூர் எஸ்பி

0பார்த்தது
கடலூர்: 4 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம் - கடலூர் எஸ்பி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவர் கிருபாகரன், தேவகிருஷ்ணன் மற்றும் நிலைய எழுத்தர்கள் கிருஷ்ணவேல், ராஜேஷ் ஆகியோர் கடலூர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை எஸ்பி ஜெயக்குமார் ஐபிஎஸ் பிறப்பித்துள்ளார். அனுமதி மீறி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பட்டியல் போலீசார் சார்பில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி