கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பெங்களூரிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய முயன்ற 5 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 474 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.