கடலூர்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

52பார்த்தது
கடலூர்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 102 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தங்க மோதிரம் அணிவித்தார். உடன் கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கே.எஸ். ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், தொகுதி பார்வையாளர் சுவை.சுரேஷ் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி