கடலூர் அருகே வைரங்குப்பத்தைச் சேர்ந்த 32 வயது பகவதி, முதுநகர் அம்மன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், கடித்த பாம்புடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். மருத்துவர்கள் அது விஷமில்லாத பாம்பு என உறுதிசெய்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.