கடலூர் மாவட்டம் பூவாணிக்குப்பம் அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.