கடலூர் நியூ சினிமா ஜங்க்ஷனில் அருகே சீமாட்டி பாயிண்ட் நோக்கி சென்ற பைக் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பைக்கை ஓட்டி வந்த நபர் நடுரோட்டிலேயே பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அங்கிருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பைக்கை நிறுத்திவிட்டு ஓடிய நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.