கடலூர் அருகே வண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எம். புதூர் அருகே சென்றபோது, கன்டெய்னர் லாரி மோதியதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.