தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கமலநாதன் இவர் புதுச்சேரியில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் (மார்ச் 27) சொந்த வேலைக் காரணமாக தனது காரில் புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்தார். கடலூர் ஜவான்பவன் சாலையில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து கெடிலம் ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தில் கமலநாதன் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின் மீட்புவாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது.