கடலூர் அருகே 17 வயது சிறுமியை 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தான். இதில் சிறுமி கர்ப்பமானார். இதை அறிந்த சிறுவனின் தாய், சிறுமியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது இந்த விவரம் தெரியவந்தது. சிறுவன் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.