கடலூர்: பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டல் - இளைஞர் மீது வழக்கு

789பார்த்தது
கடலூர்: பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டல் - இளைஞர் மீது வழக்கு
கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது திருமணமான பெண் ஒருவர், செயலி மூலம் ராமேசுவரத்தைச் சேர்ந்த அஜித் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அஜித் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாகப் பதிவு செய்து, அதைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், அந்த வீடியோவை பெண்ணின் குடும்பத்தினருக்கும் அனுப்பியுள்ளார். இதைத் தட்டிக் கேட்ட பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி