நெல்லிக்குப்பம் குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 17.02.2025 அன்று கடலூர் அருகே கோவிலில் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சிறுமி சந்தோஷ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2 மாத கர்ப்பிணியான சிறுமி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சட்ட விதிமுறைகளை மீறி திருமணம் நடந்ததும், அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வாலிபர் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.