முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது யூடியூப் சேனல் ஒன்றில் தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் ரசிகைகளை அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கடலூர் எஸ்.பி. அலுவலகம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் தவெகவினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பொன்ராஜ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.