கடலூர் புதுநகர் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டுவதாகவும், தொழிலாளர் சட்டங்களையும் ஒப்பந்த சரத்துகளையும் அமல்படுத்தாமல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி, நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார்.