கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (03.12.2025) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ. ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.