கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

6பார்த்தது
கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய 9 உணவகங்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி