கடலூர்: சிப்காட் திட்ட இயக்குனர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

69பார்த்தது
கடலூர்: சிப்காட் திட்ட இயக்குனர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில் கடலூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் சம்பந்தமாக மாவட்ட தொழிலாளர் நல வாரியம் மற்றும் சிப்காட் திட்ட இயக்குனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் தொழில் சம்பந்தமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரும்போது கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவை தொழிலாளர் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பினை தொழிலாளர் நலன் சட்டங்களின்படி உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என கூட்டத்தில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானபிரகாசம், துணை ஆணையர் (தொழிலாளர் பாதுகாப்பு (ம) தொழிலாளர் நலன் மகேஷ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் ( தொழிற்சாலை) விக்னேஷ், சிப்காட் திட்ட இயக்குனர். காந்திமதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், (தலைமையிடம்) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you