வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி இன்று 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடலூரில் மாபெரும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முத்துகிருஷ்ணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.