கடலூர் மாநகராட்சி 1வது வார்டு பகுதிகளில் நாள்தோறும் நடைபெறும் தூய்மை பணிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.