பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி , விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.