கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கீழ்பூவாணிகுப்பத்தைச் சேர்ந்த பூபாலன் (63) என்பவர் வீடு வழங்குவோர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாகக் கூறி, அலுவலக நுழைவாயில் அருகே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து, ஆட்சியர் விசாரணை நடத்தி தனக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையைக் கேட்டறிந்தனர். பின்னர் அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனர்.