கடலூர்: ஆசிட் குடித்த முதியவர் உயிரிழப்பு

484பார்த்தது
கடலூர்: ஆசிட் குடித்த முதியவர் உயிரிழப்பு
கடலூர் முதுநகர் அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந்த 67 வயது வேலாயுதம், கடந்த 20 ஆம் தேதி தண்ணீர் என நினைத்து கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி