கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மயங்கி விழுந்த 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெயர் பாவாடை என்றும், விலாசம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.