கடலூர்: தனியார் இல்லத்தில் முதியவர் உயிரிழப்பு

1பார்த்தது
கடலூர்: தனியார் இல்லத்தில் முதியவர் உயிரிழப்பு
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் வீடற்றோர் தங்கும் இல்லத்தில் தங்கியிருந்த ராஜசேகர் (70) உடல்நலக்குறைவால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் விடுதி ஒருங்கிணைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி