சென்னையைச் சேர்ந்த மரிய பிரகாசம் (80) தஞ்சாவூரில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். பண்ருட்டி அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடன் வந்த மகனிடம் கூறிய சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.